Thursday, September 04, 2008

இன்று ஒரு தனிமை

தனிமை என்பது பற்றிய சிறிய உளறல்கள் இங்கே....

தனியாக எங்கேயும் இருப்பது தனிமை அல்ல.. பெரிய கூட்டத்தில் யாருமே கூட பேசுறதுக்கு இல்லாம இருப்பது தனிமை ... மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் இல்ல தாழ்ந்தவள் என்று நினைப்பது தனிமை .... கல்லூரி காலத்தில் நண்பர்கள் இல்லாமல் இருப்பது தனிமை ... விழாக்காலங்களில் உறவினர்கள் இல்லாமல் இருப்பது தனிமை ...

தனிமை இனிக்கும்
இயற்கையை ரசிக்கும் போது
காதலில் விழுந்த போது
இன்னிசை கேட்கும் போது
கண்ணிலே நீர் வரும்போது ...

தனிமை ஞாபக படுத்துவது
மழைக் காலங்களில் மனதிற்கு பிடித்தவர்களை
வெட்டியாக இருக்கும் போது இந்த பதிவுகளை
துன்பம் நிறைந்த நேரத்தில் நெருங்கிய நண்பனை
நடந்து செல்லும் போது உடனிருக்கும் அலைபேசியை

இன்றைக்கு போது இந்த மொக்கை .....

Wednesday, August 27, 2008

இன்று ஒரு விளையாட்டு

இது என்ன புதுவித விளையாட்டு ஒருவன் மற்றொருவனை மாடி விடுவது... பள்ளிகளில் பார்த்தால் சரியாக தெரியாத ஒருத்தன் நல்ல படிக்கும் மாணவனை மாட்டி விடுவார்கள் ஏதேனும் அறிவு பூர்வமான கேள்வி எழுந்தால்... ஆனால் இங்கோ பதிவு உலகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜீ ஒன்னும் தெரியாத என்னை இந்த விளையாட்டில் மாட்டி விட்டுவிட்டார்.... திண்ணை என்றதும் நினைவுக்கு வருவது கிராமம் தான்... இப்பொழுது உள்ள நகர்புற சூழ்நிலையில் சுவர் வைக்கவே இடம் இல்லை இதுல எங்க திண்ணை எல்லாம் வைக்கிறதுக்கு....


திண்ணை (சிறுகதை)


இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமம் ஒன்று இருந்தது... அங்கே இருந்த வீடுகளில் திண்ணை இருந்தது.. அதுவே இன்று இடிக்கப் பட்டது ...ஆம்...ஒரு கிராமம் நகரமானது...


திண்ணை
மாலையும் காலையும் குழந்தைகள்
படிக்கின்ற பள்ளியாக
மரத்தின் அடியிலே தீர்ப்பு வழங்கும்
பஞ்சாயத்து மேடையாக
மனதிற்கு பிடித்த சிட்டுகளை
பார்க்க உதவும் நண்பனாக
மணம் முடிக்கும் மணப்பெண்
பட்டு வாங்கும் கடையாக
மாறாத அரசியல், நாட்டு நடப்பு
பேசும் வாத களமாக
மழைக் காலங்களில் ஆடு கோழி
பதுங்கும் காப்பிடமாக


இதற்கு மேல மொக்கை போட்டா நீங்களே வந்து மிதிபீங்கனு தெரியும் ... ஆனால் அடுத்து யாரை மாட்டி விடுவது ??? இப்பொழுது எல்லாம் ரயிலில் செல்லும் போது தான் இருக்கை திண்ணை ஞாபகத்தை கொண்டு வருகுது ....

அடுத்து யார மாட்டி விடுறதுன்னு பார்க்கும் போது ... என்னுடைய பதிவுகளுக்கு விமர்சனம் செய்கின்ற தமிழ் பதிவாளர்கள் மூன்று பேர்... ஒன்று ஜியா , மாற்ற ரெண்டு பேரையும் மாட்டி விடுறத தவிர வேற வழியில்லாமல் திவ்யா மற்றும் anonymous இருவரையும் இந்த தொடர் போட்டிக்கு அழைக்கின்றேன் ..... :)





Tuesday, August 26, 2008

இன்று ஒரு நிகழ்வு

இன்று எங்கள் அலுவலகத்தில் " Social Responsibility" என்று, சமுதாய வளர்ச்சிக்கு என்ன செய்யலாம், ஏழைகளுக்கு உதவுவது பற்றி ஒரு கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள் ... நாங்கள் வழக்கம் போல வீட்ல செய்த சோறு, குழம்பு எடுத்துகிட்டு கான்டீன் நோக்கி சென்றோம் .... அங்க பார்த்தா.. உள்ள இருந்த இருக்கைகள் எல்லாம் விளக்கி வைக்கப்பட்டு இருந்தது...அந்த நிகழ்ட்சிக்காக மேஜை எல்லாவற்றையும் வெளியில் போடு வைத்திருந்தார்கள்.. ...

பின்னர் நாங்கள் வெளிய வராண்டாவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட நேரிட்டது ...அங்கே சாப்பிடும் போது நல்ல வெயில் அடிச்சுது ... அந்த வெயிலில் உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருந்தது... அப்போது நினைவிக்கு வந்தது.... நமக்கு அந்த அரிசியை படைக்கும் ஏழை விவசாயிகள் தினமும் வெயிலில் தான் உழைக்கிறார்கள் ... மற்றும் அவர்கள் மதிய உணவு அந்த வெயிலில் தான் உட்கொள்ளுவார்கள்...

இந்த "Corporate Social Responsibility" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாகவே அதற்கு செய்த ஏற்பாடு எங்களுக்கு அதன் பொருளை உணர்த்தி விட்டது ....

Saturday, August 23, 2008

இன்று ஒரு அனாதை

அனாதை என்றால் தந்தை தாய் இல்லாத ஒருவன்/ஒருவள். சில குழந்தைகள் தாய் தந்தை இருந்தும் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது, அப்புறம் தாய் தந்தை இல்லாத குழந்தைகள் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது .. இன்றைய மாறி விட்ட பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியாவில் குறைந்து விட்டதோ !!
இது ஒரு பக்கம் குறைந்து கொண்டு வருகின்ற வேலையில். ....

ஒரு காலத்தில் பெரிய கூட்டு குடும்பமாக வாழ்வார்கள் .... ஆண்மகன் வெளிய வேலைக்கு செல்வதும் பெண்மகள் வீட்டுப் பொறுப்பை ஏற்பதும் .. எந்த ஒரு விழாகாலத்திலும் மாமன், சித்தப்பா, அத்தை, பெரியப்பா அனைவரும் சந்தித்து கொள்வதும் .. அதன் பிறகு " தனி குடித்தனம்" என்ற வலைக்குள் சிக்கி தாய் தந்தையை பிரிந்து வாழும் அனாதைகள் ஆனோம் ....

இந்த தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியும், இன்றைய பொருளாதர நெருக்கடியும், ஒரு ஆண்/பெண் இருவரும் பள்ளி முடிந்த உடனே பெரும்பாலான மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்கும் அனாதைகள் போல் ஆனோம் ..... தீபாவளி, பொங்கல் வந்தால் ஊருக்கு போவதும்.... ஹ்ம்ம் அப்பொழுதாவது விடுமுறை என்ற ஒன்று உண்டு.... வீட்டிற்குச் சென்று இன்பமாக களிப்பதற்கு ....

பின்னர், சிலர் ஊர் விட்டு, சிலர் மாநிலம் விட்டு, சிலர் நாடு விட்டுச் சென்று வேலை பார்க்கும் தாய் தந்தையைப் பிரிந்து இருக்கும் அனைவரும் இன்று ஒரு அனாதை தானே !!!

Wednesday, August 20, 2008

இன்று ஒரு விஞ்ஞானம்

நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கிரகங்கள் இருக்கின்றது என்று நினைக்கிறீர்கள் ?

9 என்று நினைத்தால் தவறாகிவிடும் .... இப்பொழுது மொத்தம் 10 கிரகங்கள் உள்ளன... ஆம், "Eris" என்று ஒரு சிறிய கிரகம் கண்டு பிடிக்க பட்டுள்ளது... இதனை "Dwarf Planet" என்று சொல்லுவார்கள் .... இது "Pluto" அருகே சுற்றி கொண்டு இருக்கிறது...

ஆனால் "Pluto" வையும் சிறு கிரகங்களுடன் சேர்த்து விட்டார்கள்... ஒன்று கூட வந்த பின்பு.... இப்பொழுது 8 க்ரகங்கலே உள்ளன...

மேலும், "Nibiru" கிரகம் என்று ஒன்று உள்ளது...அது 2012 இல் நமது பூமியின் சுற்றுப்பாதையில் வந்து மோதுவதாக ஒரு வதந்தி உள்ளது... யாராவது இது வரைக்கும் எங்காவது "alien" "UFO" பற்றி ஆதார பூர்வமான செய்தி இருந்தால் பதிர்ந்து கோங்க எங்களுக்கும் தெரியட்டும் .....

Friday, August 15, 2008

இன்று ஒரு குடிகாரன்

இன்று ஒரு குடிகாரன் கிட்ட போய் " ஏன்டா இப்படி குடிகுரன்னு கேட்டா " வருகின்ற பதில்களில் ஒரு சிறிய கற்பனை ... இது உண்மையாக கூட இருக்கலாம்...


. பிச்சைகாரனிடம் போய் கேட்டா ... "எனக்கு யாரு இருக்கா ... அன்னனைக்கு பிட்சை எடுக்கும் காசை ... சாப்டுவேன் .. குடிப்பேன் ... எனக்கு சேர்த்து வைக்கணும்னு கவலை கிடையாதுன்னு சொல்லுவான் "....


. கல்லூரி மாணவனிடம் போய் கேட்டா ... " இது தான் இதெற்கெல்லாம் வயசு ... பின்னாடி தண்ணி அடிக்கவா போரோம்ம்னு சொல்லுவான் .... " ....


. அப்புறம் வேலைக்கு சேர்ந்த பின்னும் குடிக்கிற வனிடம் போய் கேட்டா .... " என்னமோ தினமும் குடிக்கிற மாதிரி கேட்குற ... எப்போவாது ஆபீஸ்ல பார்ட்டி இருக்கும் போது அடிப்பேன் அவ்ளோதான்னு சொல்லுவான் "


. இந்த ஐ.டி. தொழில் செய்ரவனிடம் போய் கேட்டா .. "ரொம்ப stress மச்சி " என்று சொல்லுவான் ...


. அமெரிக்கா போறவன்/போறவள் ... 'இங்க எல்லாருமே அடிக்குறாங்க... அவங்களுக்கு எல்லாம் ஏதாவது ஆகவ செய்து... அதனால தப்பே இல்லன்னு"...சொல்லுவானுங்க ...


. தன்னை நியாயப் படுத்த நினைப்பவன் .... " கொஞ்சமா சாப்பிட்டா தப்பு இல்ல... "Syrup" கூட "alchohol" இருக்குன்னு " சொல்லுவானுங்க ... அப்படின்னா எல்லா மருந்து கடைகளில் விற்க வேண்டியதுதானே ...


. வயசான பிறகு " கவலையை மறக்க குடிக்குறேன் " என்று சொல்லுவாங்க....


இந்த மாதிரி சொல்லிகொண்டே போகலாம் .... இந்த காலத்தில் குடிப்பழக்கம் அதிகம் ஆகிவிட்டது ... குடிப்பழக்கம் கொண்டவர்கள் ஒரு மாதம் மட்டும் ... அதை பற்றியே நினைக்காமல் இருக்க முடியுமா.... ?? எனக்கு தெரிந்த வரைக்கும் இல்லை ... எப்போடா அடுத்து வாய்ப்பு கிடைக்குமென்று அலைவார்கள் ... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுத வில்லை.... அப்படி நிறுத்தி விட்டால் சந்தோஷம் தானே ....


வாழ்க குடி !

ஒழிக குடி !!


Wednesday, August 13, 2008

இன்று ஒரு இழப்பு

நாம் நமது வாழ்கையில் இழந்த பின் திரும்ப பெற முடியாதது...



"நண்பர்களுக்கு இடையிலோ உறவினர்களுக்கு இடையிலோ வாக்கு வாதம் வரும் பொது... இடம் மாறும் "சொற்கள்" சொன்ன பின்பு திரும்ப வாபஸ் வாங்க இயலாது...அது அவர்கள் மனதில் ஆழமாக பதிர்ந்து விடும்..."



"படிக்கும் வயதிலே படிக்க வேண்டும் ... விளையாடும் பருவத்திலே விளையாட வேண்டும்.... "காலம்" பொன் போன்றது ...அத்தகைய காலம் இழந்தால் திரும்ப பெற முடியாது...



"ஒருவன் ஓட்ட பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போது , ஒரு நொடி ஒரு வேளை தோர்த்து விடுவமோ என்று நினைத்தால், முதலில் ஓடி கொண்டு இருந்தாலும் கோப்பை வெல்லும் "வாய்ப்பை" இழந்து விடுவான் ...."



ஆகையால் "சொல், நேரம், வாய்ப்பு " இந்த மூன்றையும் இழந்தால் திரும்ப பெற இயலாது....

இன்று ஒரு தத்துவம்

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"

இந்த வாக்கியத்தை சற்றென்று பார்க்கும் போதுதோனுவதாவது ... இது உன் கடமை என்றால் நீ செய்ய வேண்டும் அதற்கு பலனை எதிர்பார்க்க கூடாது... ஆழ்ந்து நோக்கினால் .. "கடமையைச் செய்" என்பது நிகழ்காலம் "பலன்" கிடைப்பது என்பது எதிர்காலம் .... எந்த ஒரு நல்ல காரியம் பண்ணுவதற்கும் நாளை (எதிர்காலம்) வரை காத்திராமல் அன்றே (நிகழ்காலம்) செவ்வென செய்ய வேண்டும் என்ற பொருள் விளங்கும்.