Wednesday, August 27, 2008

இன்று ஒரு விளையாட்டு

இது என்ன புதுவித விளையாட்டு ஒருவன் மற்றொருவனை மாடி விடுவது... பள்ளிகளில் பார்த்தால் சரியாக தெரியாத ஒருத்தன் நல்ல படிக்கும் மாணவனை மாட்டி விடுவார்கள் ஏதேனும் அறிவு பூர்வமான கேள்வி எழுந்தால்... ஆனால் இங்கோ பதிவு உலகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜீ ஒன்னும் தெரியாத என்னை இந்த விளையாட்டில் மாட்டி விட்டுவிட்டார்.... திண்ணை என்றதும் நினைவுக்கு வருவது கிராமம் தான்... இப்பொழுது உள்ள நகர்புற சூழ்நிலையில் சுவர் வைக்கவே இடம் இல்லை இதுல எங்க திண்ணை எல்லாம் வைக்கிறதுக்கு....


திண்ணை (சிறுகதை)


இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமம் ஒன்று இருந்தது... அங்கே இருந்த வீடுகளில் திண்ணை இருந்தது.. அதுவே இன்று இடிக்கப் பட்டது ...ஆம்...ஒரு கிராமம் நகரமானது...


திண்ணை
மாலையும் காலையும் குழந்தைகள்
படிக்கின்ற பள்ளியாக
மரத்தின் அடியிலே தீர்ப்பு வழங்கும்
பஞ்சாயத்து மேடையாக
மனதிற்கு பிடித்த சிட்டுகளை
பார்க்க உதவும் நண்பனாக
மணம் முடிக்கும் மணப்பெண்
பட்டு வாங்கும் கடையாக
மாறாத அரசியல், நாட்டு நடப்பு
பேசும் வாத களமாக
மழைக் காலங்களில் ஆடு கோழி
பதுங்கும் காப்பிடமாக


இதற்கு மேல மொக்கை போட்டா நீங்களே வந்து மிதிபீங்கனு தெரியும் ... ஆனால் அடுத்து யாரை மாட்டி விடுவது ??? இப்பொழுது எல்லாம் ரயிலில் செல்லும் போது தான் இருக்கை திண்ணை ஞாபகத்தை கொண்டு வருகுது ....

அடுத்து யார மாட்டி விடுறதுன்னு பார்க்கும் போது ... என்னுடைய பதிவுகளுக்கு விமர்சனம் செய்கின்ற தமிழ் பதிவாளர்கள் மூன்று பேர்... ஒன்று ஜியா , மாற்ற ரெண்டு பேரையும் மாட்டி விடுறத தவிர வேற வழியில்லாமல் திவ்யா மற்றும் anonymous இருவரையும் இந்த தொடர் போட்டிக்கு அழைக்கின்றேன் ..... :)





Tuesday, August 26, 2008

இன்று ஒரு நிகழ்வு

இன்று எங்கள் அலுவலகத்தில் " Social Responsibility" என்று, சமுதாய வளர்ச்சிக்கு என்ன செய்யலாம், ஏழைகளுக்கு உதவுவது பற்றி ஒரு கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள் ... நாங்கள் வழக்கம் போல வீட்ல செய்த சோறு, குழம்பு எடுத்துகிட்டு கான்டீன் நோக்கி சென்றோம் .... அங்க பார்த்தா.. உள்ள இருந்த இருக்கைகள் எல்லாம் விளக்கி வைக்கப்பட்டு இருந்தது...அந்த நிகழ்ட்சிக்காக மேஜை எல்லாவற்றையும் வெளியில் போடு வைத்திருந்தார்கள்.. ...

பின்னர் நாங்கள் வெளிய வராண்டாவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட நேரிட்டது ...அங்கே சாப்பிடும் போது நல்ல வெயில் அடிச்சுது ... அந்த வெயிலில் உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருந்தது... அப்போது நினைவிக்கு வந்தது.... நமக்கு அந்த அரிசியை படைக்கும் ஏழை விவசாயிகள் தினமும் வெயிலில் தான் உழைக்கிறார்கள் ... மற்றும் அவர்கள் மதிய உணவு அந்த வெயிலில் தான் உட்கொள்ளுவார்கள்...

இந்த "Corporate Social Responsibility" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாகவே அதற்கு செய்த ஏற்பாடு எங்களுக்கு அதன் பொருளை உணர்த்தி விட்டது ....

Saturday, August 23, 2008

இன்று ஒரு அனாதை

அனாதை என்றால் தந்தை தாய் இல்லாத ஒருவன்/ஒருவள். சில குழந்தைகள் தாய் தந்தை இருந்தும் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது, அப்புறம் தாய் தந்தை இல்லாத குழந்தைகள் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது .. இன்றைய மாறி விட்ட பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியாவில் குறைந்து விட்டதோ !!
இது ஒரு பக்கம் குறைந்து கொண்டு வருகின்ற வேலையில். ....

ஒரு காலத்தில் பெரிய கூட்டு குடும்பமாக வாழ்வார்கள் .... ஆண்மகன் வெளிய வேலைக்கு செல்வதும் பெண்மகள் வீட்டுப் பொறுப்பை ஏற்பதும் .. எந்த ஒரு விழாகாலத்திலும் மாமன், சித்தப்பா, அத்தை, பெரியப்பா அனைவரும் சந்தித்து கொள்வதும் .. அதன் பிறகு " தனி குடித்தனம்" என்ற வலைக்குள் சிக்கி தாய் தந்தையை பிரிந்து வாழும் அனாதைகள் ஆனோம் ....

இந்த தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியும், இன்றைய பொருளாதர நெருக்கடியும், ஒரு ஆண்/பெண் இருவரும் பள்ளி முடிந்த உடனே பெரும்பாலான மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்கும் அனாதைகள் போல் ஆனோம் ..... தீபாவளி, பொங்கல் வந்தால் ஊருக்கு போவதும்.... ஹ்ம்ம் அப்பொழுதாவது விடுமுறை என்ற ஒன்று உண்டு.... வீட்டிற்குச் சென்று இன்பமாக களிப்பதற்கு ....

பின்னர், சிலர் ஊர் விட்டு, சிலர் மாநிலம் விட்டு, சிலர் நாடு விட்டுச் சென்று வேலை பார்க்கும் தாய் தந்தையைப் பிரிந்து இருக்கும் அனைவரும் இன்று ஒரு அனாதை தானே !!!

Wednesday, August 20, 2008

இன்று ஒரு விஞ்ஞானம்

நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கிரகங்கள் இருக்கின்றது என்று நினைக்கிறீர்கள் ?

9 என்று நினைத்தால் தவறாகிவிடும் .... இப்பொழுது மொத்தம் 10 கிரகங்கள் உள்ளன... ஆம், "Eris" என்று ஒரு சிறிய கிரகம் கண்டு பிடிக்க பட்டுள்ளது... இதனை "Dwarf Planet" என்று சொல்லுவார்கள் .... இது "Pluto" அருகே சுற்றி கொண்டு இருக்கிறது...

ஆனால் "Pluto" வையும் சிறு கிரகங்களுடன் சேர்த்து விட்டார்கள்... ஒன்று கூட வந்த பின்பு.... இப்பொழுது 8 க்ரகங்கலே உள்ளன...

மேலும், "Nibiru" கிரகம் என்று ஒன்று உள்ளது...அது 2012 இல் நமது பூமியின் சுற்றுப்பாதையில் வந்து மோதுவதாக ஒரு வதந்தி உள்ளது... யாராவது இது வரைக்கும் எங்காவது "alien" "UFO" பற்றி ஆதார பூர்வமான செய்தி இருந்தால் பதிர்ந்து கோங்க எங்களுக்கும் தெரியட்டும் .....

Friday, August 15, 2008

இன்று ஒரு குடிகாரன்

இன்று ஒரு குடிகாரன் கிட்ட போய் " ஏன்டா இப்படி குடிகுரன்னு கேட்டா " வருகின்ற பதில்களில் ஒரு சிறிய கற்பனை ... இது உண்மையாக கூட இருக்கலாம்...


. பிச்சைகாரனிடம் போய் கேட்டா ... "எனக்கு யாரு இருக்கா ... அன்னனைக்கு பிட்சை எடுக்கும் காசை ... சாப்டுவேன் .. குடிப்பேன் ... எனக்கு சேர்த்து வைக்கணும்னு கவலை கிடையாதுன்னு சொல்லுவான் "....


. கல்லூரி மாணவனிடம் போய் கேட்டா ... " இது தான் இதெற்கெல்லாம் வயசு ... பின்னாடி தண்ணி அடிக்கவா போரோம்ம்னு சொல்லுவான் .... " ....


. அப்புறம் வேலைக்கு சேர்ந்த பின்னும் குடிக்கிற வனிடம் போய் கேட்டா .... " என்னமோ தினமும் குடிக்கிற மாதிரி கேட்குற ... எப்போவாது ஆபீஸ்ல பார்ட்டி இருக்கும் போது அடிப்பேன் அவ்ளோதான்னு சொல்லுவான் "


. இந்த ஐ.டி. தொழில் செய்ரவனிடம் போய் கேட்டா .. "ரொம்ப stress மச்சி " என்று சொல்லுவான் ...


. அமெரிக்கா போறவன்/போறவள் ... 'இங்க எல்லாருமே அடிக்குறாங்க... அவங்களுக்கு எல்லாம் ஏதாவது ஆகவ செய்து... அதனால தப்பே இல்லன்னு"...சொல்லுவானுங்க ...


. தன்னை நியாயப் படுத்த நினைப்பவன் .... " கொஞ்சமா சாப்பிட்டா தப்பு இல்ல... "Syrup" கூட "alchohol" இருக்குன்னு " சொல்லுவானுங்க ... அப்படின்னா எல்லா மருந்து கடைகளில் விற்க வேண்டியதுதானே ...


. வயசான பிறகு " கவலையை மறக்க குடிக்குறேன் " என்று சொல்லுவாங்க....


இந்த மாதிரி சொல்லிகொண்டே போகலாம் .... இந்த காலத்தில் குடிப்பழக்கம் அதிகம் ஆகிவிட்டது ... குடிப்பழக்கம் கொண்டவர்கள் ஒரு மாதம் மட்டும் ... அதை பற்றியே நினைக்காமல் இருக்க முடியுமா.... ?? எனக்கு தெரிந்த வரைக்கும் இல்லை ... எப்போடா அடுத்து வாய்ப்பு கிடைக்குமென்று அலைவார்கள் ... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுத வில்லை.... அப்படி நிறுத்தி விட்டால் சந்தோஷம் தானே ....


வாழ்க குடி !

ஒழிக குடி !!


Wednesday, August 13, 2008

இன்று ஒரு இழப்பு

நாம் நமது வாழ்கையில் இழந்த பின் திரும்ப பெற முடியாதது...



"நண்பர்களுக்கு இடையிலோ உறவினர்களுக்கு இடையிலோ வாக்கு வாதம் வரும் பொது... இடம் மாறும் "சொற்கள்" சொன்ன பின்பு திரும்ப வாபஸ் வாங்க இயலாது...அது அவர்கள் மனதில் ஆழமாக பதிர்ந்து விடும்..."



"படிக்கும் வயதிலே படிக்க வேண்டும் ... விளையாடும் பருவத்திலே விளையாட வேண்டும்.... "காலம்" பொன் போன்றது ...அத்தகைய காலம் இழந்தால் திரும்ப பெற முடியாது...



"ஒருவன் ஓட்ட பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போது , ஒரு நொடி ஒரு வேளை தோர்த்து விடுவமோ என்று நினைத்தால், முதலில் ஓடி கொண்டு இருந்தாலும் கோப்பை வெல்லும் "வாய்ப்பை" இழந்து விடுவான் ...."



ஆகையால் "சொல், நேரம், வாய்ப்பு " இந்த மூன்றையும் இழந்தால் திரும்ப பெற இயலாது....

இன்று ஒரு தத்துவம்

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"

இந்த வாக்கியத்தை சற்றென்று பார்க்கும் போதுதோனுவதாவது ... இது உன் கடமை என்றால் நீ செய்ய வேண்டும் அதற்கு பலனை எதிர்பார்க்க கூடாது... ஆழ்ந்து நோக்கினால் .. "கடமையைச் செய்" என்பது நிகழ்காலம் "பலன்" கிடைப்பது என்பது எதிர்காலம் .... எந்த ஒரு நல்ல காரியம் பண்ணுவதற்கும் நாளை (எதிர்காலம்) வரை காத்திராமல் அன்றே (நிகழ்காலம்) செவ்வென செய்ய வேண்டும் என்ற பொருள் விளங்கும்.

Tuesday, August 12, 2008

இன்று ஒரு ஒற்றுமை

இன்று நான் இங்கே இயற்கை நீரை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்த சிறிய கற்பனையே இது ....

மலையின் உட்சியிலே ஊற்றேடுகின்ற நீரைப் போல நாமும் இந்த தரணியில் வெவேறு இடங்களில் வெவேறு தரூனத்தில் பிறக்கின்றோம் .... பின்பு தவழ்ந்து நடக்கும் பருவத்தில் பல முறை நடக்க முயற்சித்து கீழ விழுகின்றோம்.... அது போன்று நீர் வீழ்ட்சியாக கிழே வீழ்கிறது .... பின்பு ஒவ்வொருவரும் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து நமது ஒழுக்கம், பண்பு, அறிவு எல்லாவற்றையும் சீர் செய்கிறோம்....அது போன்று நீர் வீழ்ட்சி பல சிற்றோடயாக ஓடி பள்ளம் மேடு தாண்டி சீரான நிலை அடைகிறது... பின்பு நாம் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறோம் ....அது போல இந்த ஒடைகலானது ஒன்றாக சேர்ந்து ஆறு என்பதை உருவாக்கின்றது ... இந்த கல்லூரி பருவமானது ஆற்று நீரை போல இனிமையானது... வெள்ளம் வருவது செமஸ்டர் பரீட்சை வருவது போல...ஒரு சில நேரம் இருக்கும்... ஆனால் பழைய நிலையை மீண்டும் பெரும்... அதன் பின்னே ஆறு கடலை அடைகிறது.... அது மனித வாழ்கையின் பிந்திய நிலை போல...இன்பத்தை தொலைத்து... இன்பம் கலந்த சகிப்பு தன்மை நிறைந்த .... ஆற்று நீர் கலந்த உப்பு நீர் கொண்ட கடல் போல் ஆகிறது...

ரொம்ப மொக்கை போட்டுடனோ .... :)

Monday, August 11, 2008

இன்று ஒரு விமர்சனம்

இது திரைப்படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. இது ஒரு வகையான மனிதனை பற்றியது....

இவண் தன்னை நன்றாக படித்த ஒரே மனிதன் என்று நினைப்பவன்
இவண் வேறு எந்த வேலையும் செய்ய தெரியாது என்பதை மறந்தவன்...
இவண் தன்னை நிறைய சம்பாதிப்பவன் என்று நினைப்பவன்
இவண் குறைந்த சம்பளத்தில் வாழ்கை வாழத் தெரியாதவன் ...
இவண் பணம் புகழ் தேடி அந்நிய நாட்டுக்கு செல்கின்ற வாலிபன்
இவண் பாசம் காட்ட முடியாமல் அலைகின்ற பணக்காரன் ...
இவண் பணமின்றி ஏதுமற்ற பிச்சை காரன் ..... யார் இவண்
மென்பொருள் பொறியாளன் .............................


Friday, August 08, 2008

இன்று ஒரு அறிவுரை

"Dont lose the years in a second"

நல்ல பெயர் வாங்குறது ரொம்ப கஷ்டம் ... ரொம்ப நாளாகும் .... ஆனா அதே நேரத்துல அது கேட்டு போறதுக்கு ஒரு சில நொடிகள் போதும்....

அறிவுரை என்னன்னா, எந்த ஒரு காரியம் செய்தாலும் அவசரமின்றி பொறுமையா செய்யணும். சாலை கடக்கும் போதும் ரெண்டு நிமிஷம் தாமதமான தப்பு இல்ல... அதற்காச அவசரப்பட்டு இத்தன வருஷம் சேர்த்து வச்ச அம்மாவின் அன்பு, அப்பாவின் அரவணைப்பு, நண்பனின் நட்பு, காதலியின் முத்தம் எல்லாவற்றையும் ... விபத்து என்ற பெயரில் இழந்து விடாதே....

"பதறிய காரியம் சிதறி போகும் " ... "ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு"....என்றெல்லாம் சொல்லுவார்கள்....

Wednesday, August 06, 2008

இன்று ஒரு பழமொழி

"ஊமை ஊரை கெடுக்கும் பெருச்சாளி வீட்டை கெடுக்கும்"

இதற்கு அர்த்தம் யாதெனில், ஊமை போல் அமைதியாக இருப்பவர்களை பார்த்து ஒன்றும் தெரியாது என்று நினைக்க கூடாது. அவர்களிடம் நிறைய சிந்தனை விஷயங்கள் இருக்கும்.





இன்று ஒரு சமையல்

Bachelors-ஆ வாழும் பெரும்பாலான இளைஞர்களுக்கு தெரிந்த ஒன்றே சாம்பார். இன்று சாம்பார் செய்வது எப்படி என்று பார்போம்.

ஒரு சின்ன டம்ளர் நெறைய பருப்பு (Toor Daal), அப்புறம் carrot மற்றும் beans சேர்த்து சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து குக்கர்ல ரெண்டு விசில் வரைக்கும் வைக்கவும்.

வானெலியில் எண்ணெய் கடுகு போட்டு வெட்டி வைத்த வெங்காயம் தக்காளி மிளகாய் போடு நன்றாக தாளிக்கவும். அதன் பிறகு குக்கர்ல வேக வச்ச பருப்பு இதிலே சேர்க்கவும். பின்னே சாம்பார் பவுடர் மிளகாய் தூள் கொஞ்சம் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். மல்லி இலை இருந்தால் சேர்த்து வைத்தால் மணம் தூக்கும்.

சுவையான எளிதான சாம்பார் தயார்.

Tuesday, August 05, 2008

இன்று ஒரு தகவல்

தென்கட்சி கோ சுவாமிநாதன் தான் நம்ம ஞாபகத்துக்கு வருவார்....... இந்த தலைப்பை பார்த்தவுடன் ... சரிதான்... தினமும் காலையில நம்ம All India Radio-ல 7.40 க்கு இவர் தான் வந்து எதாவது கதை சொல்லுவாரு... அப்புறம் அதுக்கு விளக்கம் கொடுத்து கருத்தும் கொடுப்பார்.......

இதோ ஒரு சிறு கதை

ரெண்டு முனிவர்கள் தங்களது குருவை காண சென்று கொண்டிருந்த வேலையில் ... ஆற்றின் கரையினிலே ஒரு அழகிய பெண், ஆற்றை கடக்க முடியாமல் உட்கார்ந்து இருந்தாள். அவள் அவர்களிடம் ஆற்றை கடக்க உதவுமாறு கேட்டாள்... அதற்கு ஒரு முனிவர் பெண்ணை சுமப்பது பாவம் ஆகும்...என்றார்... மற்றொரு முனிவர்...அந்த பெண்ணை சுமர்ந்து சென்று ஆற்றை கடர்ந்து அந்த பெண்ணை விட்டு சென்றார்.....

செல்லும் வழியில் பாவம் என்ற முனிவர், இந்த முனிவரிடம் நம்ம குரு எந்த பெண்ணையும் சுமக்க கூடாதுன்னு சொல்லிருகாறு...நீர் ஏன் இப்படி செய்தீர் என்று கேட்டார். அதற்கு இந்த முனிவர் "நான் எப்பொழுதே அதை மறந்து விட்டேன்... நீர் தான் இன்னும் அந்த பெண்ணை மனதில் நினைத்து கொண்டு இருக்கீர்" என்று சொன்னார் .

இதிலிருந்து கருத்து என்ன வென்றால்,

எந்த ஒரு நேரத்திலும் பாவ காரியங்கள் என்று நாம் நினைப்பது நமது மனதில் நீங்காமல் இடம் பெரும்... அதை அழிப்பது கடினம்... யார் செய்த நல்ல காரியங்களையும் மனதில் தங்குவதை விட...செய்த பாவங்கள் மனதில் நீங்காது...

Driver License in Dallas

Why do we need a CAR/Driver License?

In USA, one cant live without a vehicle as it is the basic necessity for each home. Also the local buses doesnt cover all the roads in a particular city. Anyways, near my home the bus facility is there but inorder to get to the office daily, I need to catch a bus and then a train. Incase we need to go to some other place, we might need to go for multiple hop-over the public transit. It would be better if you have a CAR and ofcourse, the driver license for driving.

How to get the driver license?

I couldnt find a website with proper details for getting the driving license. After exploring it is found that first we need to get a IP (Instruction permit) like Learner's license in most of the countries. Once we get the IP, we can join in some driving school and obtain a license after learning.

How to get an IP first?

We have to go through the written exam, vision test in the Dallas Public Safety office. The materials for the written exam is provided at http://www.txdps.state.tx.us/

Note : This is only for the Texas state.

Go through the DL Handbook and it would hardly take 2 days for an average reader.

Process for acquiring IP:
================
1. We can give the exams only at 2 offices in Dallas. (Details in the above link)
2. How to get there?
- Get to the park lane station
- Get the 428 Bus, bound for South Garland Transit Centre and get down at Jupiter Road intersection on NorthWest Highway.
- AT the intersection itself, you can see the Dallas Public Safety office.
3. The office opens at 8.00am and they start allowing people inside from 7.45 am itself.
4. Documents required for verification (21 yr or older)

- Passport and SSN (U.S Citizen),
- Passport (VISA), SSN, Employment verification letter for others.

All these details you can find in the DL handbook.

5. Once verified wait for your turn and there will be vision test followed by the basic knowledge test on the computer.

6. Once you have taken 70% and cleared, you will be issued an Instruction permit. The exam is not that tough or difficult to attempt.

7. Please have a cash of $5 for application fee. This application is valid for 90 days and you can give the exam thrice within 90 days.

Now you have the rights to drive (learning) with a licensed driver (21 yr or older) on the other end.

Once I get the drivers license itself, will put further details fo the same.