இன்று ஒரு குடிகாரன் கிட்ட போய் " ஏன்டா இப்படி குடிகுரன்னு கேட்டா " வருகின்ற பதில்களில் ஒரு சிறிய கற்பனை ... இது உண்மையாக கூட இருக்கலாம்...
௧. பிச்சைகாரனிடம் போய் கேட்டா ... "எனக்கு யாரு இருக்கா ... அன்னனைக்கு பிட்சை எடுக்கும் காசை ... சாப்டுவேன் .. குடிப்பேன் ... எனக்கு சேர்த்து வைக்கணும்னு கவலை கிடையாதுன்னு சொல்லுவான் "....
௨. கல்லூரி மாணவனிடம் போய் கேட்டா ... " இது தான் இதெற்கெல்லாம் வயசு ... பின்னாடி தண்ணி அடிக்கவா போரோம்ம்னு சொல்லுவான் .... " ....
௩. அப்புறம் வேலைக்கு சேர்ந்த பின்னும் குடிக்கிற வனிடம் போய் கேட்டா .... " என்னமோ தினமும் குடிக்கிற மாதிரி கேட்குற ... எப்போவாது ஆபீஸ்ல பார்ட்டி இருக்கும் போது அடிப்பேன் அவ்ளோதான்னு சொல்லுவான் "
௪. இந்த ஐ.டி. தொழில் செய்ரவனிடம் போய் கேட்டா .. "ரொம்ப stress மச்சி " என்று சொல்லுவான் ...
௫. அமெரிக்கா போறவன்/போறவள் ... 'இங்க எல்லாருமே அடிக்குறாங்க... அவங்களுக்கு எல்லாம் ஏதாவது ஆகவ செய்து... அதனால தப்பே இல்லன்னு"...சொல்லுவானுங்க ...
௬. தன்னை நியாயப் படுத்த நினைப்பவன் .... " கொஞ்சமா சாப்பிட்டா தப்பு இல்ல... "Syrup" ல கூட "alchohol" இருக்குன்னு " சொல்லுவானுங்க ... அப்படின்னா எல்லா மருந்து கடைகளில் விற்க வேண்டியதுதானே ...
௭. வயசான பிறகு " கவலையை மறக்க குடிக்குறேன் " என்று சொல்லுவாங்க....
இந்த மாதிரி சொல்லிகொண்டே போகலாம் .... இந்த காலத்தில் குடிப்பழக்கம் அதிகம் ஆகிவிட்டது ... குடிப்பழக்கம் கொண்டவர்கள் ஒரு மாதம் மட்டும் ... அதை பற்றியே நினைக்காமல் இருக்க முடியுமா.... ?? எனக்கு தெரிந்த வரைக்கும் இல்லை ... எப்போடா அடுத்து வாய்ப்பு கிடைக்குமென்று அலைவார்கள் ... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுத வில்லை.... அப்படி நிறுத்தி விட்டால் சந்தோஷம் தானே ....
வாழ்க குடி !
ஒழிக குடி !!
6 comments:
kakakakkaa......hehehehheehhhe...
ni enna solluva? ru-va?
en ipdi thanni adicha madiri olarra?
Mr/Miss Anonymous...please use identity...
KAGAGA PO !!! Thaniya iruka bore adikudho !? Romba kudikiriyae , sorry kadikiriyae ??
நல்ல பதிவு:))
குடிப்பதற்காக ஏதோ ஒரு காரணத்தை சாக்கு சொல்பவர்களை நன்றாக சாடியுள்ளீர்கள்:))
Post a Comment