இது என்ன புதுவித விளையாட்டு ஒருவன் மற்றொருவனை மாடி விடுவது... பள்ளிகளில் பார்த்தால் சரியாக தெரியாத ஒருத்தன் நல்ல படிக்கும் மாணவனை மாட்டி விடுவார்கள் ஏதேனும் அறிவு பூர்வமான கேள்வி எழுந்தால்... ஆனால் இங்கோ பதிவு உலகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜீ ஒன்னும் தெரியாத என்னை இந்த விளையாட்டில் மாட்டி விட்டுவிட்டார்.... திண்ணை என்றதும் நினைவுக்கு வருவது கிராமம் தான்... இப்பொழுது உள்ள நகர்புற சூழ்நிலையில் சுவர் வைக்கவே இடம் இல்லை இதுல எங்க திண்ணை எல்லாம் வைக்கிறதுக்கு....
திண்ணை (சிறுகதை)
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமம் ஒன்று இருந்தது... அங்கே இருந்த வீடுகளில் திண்ணை இருந்தது.. அதுவே இன்று இடிக்கப் பட்டது ...ஆம்...ஒரு கிராமம் நகரமானது...
திண்ணை
மாலையும் காலையும் குழந்தைகள்
படிக்கின்ற பள்ளியாக
மரத்தின் அடியிலே தீர்ப்பு வழங்கும்
பஞ்சாயத்து மேடையாக
மனதிற்கு பிடித்த சிட்டுகளை
மனதிற்கு பிடித்த சிட்டுகளை
பார்க்க உதவும் நண்பனாக
மணம் முடிக்கும் மணப்பெண்
பட்டு வாங்கும் கடையாக
மாறாத அரசியல், நாட்டு நடப்பு
பேசும் வாத களமாக
மழைக் காலங்களில் ஆடு கோழி
பதுங்கும் காப்பிடமாக
இதற்கு மேல மொக்கை போட்டா நீங்களே வந்து மிதிபீங்கனு தெரியும் ... ஆனால் அடுத்து யாரை மாட்டி விடுவது ??? இப்பொழுது எல்லாம் ரயிலில் செல்லும் போது தான் இருக்கை திண்ணை ஞாபகத்தை கொண்டு வருகுது ....
அடுத்து யார மாட்டி விடுறதுன்னு பார்க்கும் போது ... என்னுடைய பதிவுகளுக்கு விமர்சனம் செய்கின்ற தமிழ் பதிவாளர்கள் மூன்று பேர்... ஒன்று ஜியா , மாற்ற ரெண்டு பேரையும் மாட்டி விடுறத தவிர வேற வழியில்லாமல் திவ்யா மற்றும் anonymous இருவரையும் இந்த தொடர் போட்டிக்கு அழைக்கின்றேன் ..... :)
அடுத்து யார மாட்டி விடுறதுன்னு பார்க்கும் போது ... என்னுடைய பதிவுகளுக்கு விமர்சனம் செய்கின்ற தமிழ் பதிவாளர்கள் மூன்று பேர்... ஒன்று ஜியா , மாற்ற ரெண்டு பேரையும் மாட்டி விடுறத தவிர வேற வழியில்லாமல் திவ்யா மற்றும் anonymous இருவரையும் இந்த தொடர் போட்டிக்கு அழைக்கின்றேன் ..... :)
8 comments:
கலக்குற சக்தி... கவிதலாம் எழுத ஆரம்பிச்சிட்ட போல... அடுத்தது திவ்யாவா?? பாப்போம்.. அம்மணி எப்படி எழுதறாங்கன்னு :)))
நல்லாருக்கு உங்க திண்ணை..!! :)
\\மாலையும் காலையும் குழந்தைகள்
படிக்கின்ற பள்ளியாக
\\
அப்படியா??
சினிமால திண்னைன்னா என்னல்லாம் காட்டுவாங்களோ அது அப்படியே விரியுதுங்க கண்ல..நல்லா இருக்கு :))
அட ......நீங்களும் இதே tag post க்கு மாட்டி விட்டுட்டீங்களா:(
\\பஞ்சாயத்து மேடையாக\\
சினிமா ல.....ஒரு மரத்தடி தானே காட்டுவாங்க பஞ்சாயத்து பண்றதுக்கு??
திண்ணையிலும் பஞ்சாயத்து நடக்குமா??
\\மனதிற்கு பிடித்த சிட்டுகளை
பார்க்க உதவும் நண்பனாக\\
ஆஹா.......சைட் அடிக்கிற ஸ்பாட் திண்ணையா??
இது புதுசா இருக்குதே:))
\\ தவிர வேற வழியில்லாமல் திவ்யா மற்றும் anonymous இருவரையும் இந்த தொடர் போட்டிக்கு அழைக்கின்றேன் ..... :)\\
திண்ணை அனுபவம் எதுவும் இல்லீங்க......
இருந்தாலும், போனா போகுதுன்னு நீங்க வேறு வழியில்லாம என்னை மாட்டி விட்டிருந்தாலும்......ஐயோ பாவம் னு நானும் தொடரை தொடர முயற்சி பண்றேன்:(
வாங்க ஜி கவிதை எல்லாம் ஒன்னும் இல்ல.,..ஏதோ எழுதனும்னு தான் எழுதினேன் ...
மற்றவங்களோட பதிவுகள படிச்சு பார்த்த பின்னர் எழுதனும்னு நினச்சா... ஒன்னுமே தோனல ...
நன்றி Sri உங்க பதிவுகள் பார்த்துட்டு தான் இப்படி...
Ramya Ramani சினிமா அப்புறம் நேர்ல பார்த்த வச்சு எழுதினது தான்...
Divya
பஞ்சாயத்து மரத்துக்கு அடியிலே ஒரு திண்டு இருக்கும் அதுல உட்கார்ந்து தானே பெருசுங்க எல்லாம் தீர்ப்பு சொல்லுவாங்க...படத்துல ...
திண்ணை பத்தி நீங்க எழுதுறதுல என்ன கடினம்னா ... இது வரைக்கும் யாரும் எழுதாத எழுதனும்...அது எனக்கு கடினம்...உங்களுக்கு இருக்காது...
வாழ்த்துக்கள் ...
Post a Comment