Saturday, August 23, 2008

இன்று ஒரு அனாதை

அனாதை என்றால் தந்தை தாய் இல்லாத ஒருவன்/ஒருவள். சில குழந்தைகள் தாய் தந்தை இருந்தும் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது, அப்புறம் தாய் தந்தை இல்லாத குழந்தைகள் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது .. இன்றைய மாறி விட்ட பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியாவில் குறைந்து விட்டதோ !!
இது ஒரு பக்கம் குறைந்து கொண்டு வருகின்ற வேலையில். ....

ஒரு காலத்தில் பெரிய கூட்டு குடும்பமாக வாழ்வார்கள் .... ஆண்மகன் வெளிய வேலைக்கு செல்வதும் பெண்மகள் வீட்டுப் பொறுப்பை ஏற்பதும் .. எந்த ஒரு விழாகாலத்திலும் மாமன், சித்தப்பா, அத்தை, பெரியப்பா அனைவரும் சந்தித்து கொள்வதும் .. அதன் பிறகு " தனி குடித்தனம்" என்ற வலைக்குள் சிக்கி தாய் தந்தையை பிரிந்து வாழும் அனாதைகள் ஆனோம் ....

இந்த தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியும், இன்றைய பொருளாதர நெருக்கடியும், ஒரு ஆண்/பெண் இருவரும் பள்ளி முடிந்த உடனே பெரும்பாலான மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்கும் அனாதைகள் போல் ஆனோம் ..... தீபாவளி, பொங்கல் வந்தால் ஊருக்கு போவதும்.... ஹ்ம்ம் அப்பொழுதாவது விடுமுறை என்ற ஒன்று உண்டு.... வீட்டிற்குச் சென்று இன்பமாக களிப்பதற்கு ....

பின்னர், சிலர் ஊர் விட்டு, சிலர் மாநிலம் விட்டு, சிலர் நாடு விட்டுச் சென்று வேலை பார்க்கும் தாய் தந்தையைப் பிரிந்து இருக்கும் அனைவரும் இன்று ஒரு அனாதை தானே !!!

2 comments:

ஜியா said...

:(((( homesickness??

நானும் இதே கான்செப்ட்ல ஒரு கவித போட்டிருக்கேன்.. டைம் இருந்தா பாருடே... :))

//விலாகாலத்திலும்// => விழா :))

Divya said...

\\சிலர் ஊர் விட்டு, சிலர் மாநிலம் விட்டு, சிலர் நாடு விட்டுச் சென்று வேலை பார்க்கும் தாய் தந்தையைப் பிரிந்து இருக்கும் அனைவரும் இன்று ஒரு அனாதை தானே\\

உண்மைதான்:(