Tuesday, August 05, 2008

இன்று ஒரு தகவல்

தென்கட்சி கோ சுவாமிநாதன் தான் நம்ம ஞாபகத்துக்கு வருவார்....... இந்த தலைப்பை பார்த்தவுடன் ... சரிதான்... தினமும் காலையில நம்ம All India Radio-ல 7.40 க்கு இவர் தான் வந்து எதாவது கதை சொல்லுவாரு... அப்புறம் அதுக்கு விளக்கம் கொடுத்து கருத்தும் கொடுப்பார்.......

இதோ ஒரு சிறு கதை

ரெண்டு முனிவர்கள் தங்களது குருவை காண சென்று கொண்டிருந்த வேலையில் ... ஆற்றின் கரையினிலே ஒரு அழகிய பெண், ஆற்றை கடக்க முடியாமல் உட்கார்ந்து இருந்தாள். அவள் அவர்களிடம் ஆற்றை கடக்க உதவுமாறு கேட்டாள்... அதற்கு ஒரு முனிவர் பெண்ணை சுமப்பது பாவம் ஆகும்...என்றார்... மற்றொரு முனிவர்...அந்த பெண்ணை சுமர்ந்து சென்று ஆற்றை கடர்ந்து அந்த பெண்ணை விட்டு சென்றார்.....

செல்லும் வழியில் பாவம் என்ற முனிவர், இந்த முனிவரிடம் நம்ம குரு எந்த பெண்ணையும் சுமக்க கூடாதுன்னு சொல்லிருகாறு...நீர் ஏன் இப்படி செய்தீர் என்று கேட்டார். அதற்கு இந்த முனிவர் "நான் எப்பொழுதே அதை மறந்து விட்டேன்... நீர் தான் இன்னும் அந்த பெண்ணை மனதில் நினைத்து கொண்டு இருக்கீர்" என்று சொன்னார் .

இதிலிருந்து கருத்து என்ன வென்றால்,

எந்த ஒரு நேரத்திலும் பாவ காரியங்கள் என்று நாம் நினைப்பது நமது மனதில் நீங்காமல் இடம் பெரும்... அதை அழிப்பது கடினம்... யார் செய்த நல்ல காரியங்களையும் மனதில் தங்குவதை விட...செய்த பாவங்கள் மனதில் நீங்காது...

No comments: